தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மாரிதுரை(83) இவரது மனைவி முத்துலட்சுமி(74). இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். ஆனந்த்(52) கூடப்பாக்கம் பகுதியில் தனது மனைவி கலாவுடன் வசித்து வந்தார். மாரி துரையும் முத்துலட்சுமியும் மகன் மற்றும் மகள்கள் வீட்டில் மாறி மாறி தங்கி இருந்தனர். கடந்த இரண்டு மாதமாக ஆனந்தின் பராமரிப்பில் இருந்த தாய் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் ஆனந்த் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லுங்கள் என கூறி விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாரிமுத்துவும், முத்துலட்சுமியும் வீட்டிற்கு செல்லாமல் பத்துகண்ணு பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர்.
இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாரி துறை பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் சிறிது நேரத்தில் முத்துலட்சுமியும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
