மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக (தவெக) மாநில மாநாட்டில் பங்கேற்க வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன், தனது நண்பர்களுடன் காரில் சென்று திரும்பி வந்துள்ளார்.
இந்தக் குழு திருச்சி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட இறங்கியுள்ளனர்,இந்நிலையில் மதன் திடீரென காணாமல் போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை தேடும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் , அவர் சாலை விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது , இது மதனே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு குடும்பத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
