இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளில் முக்கிய வீரராக விளையாடிய அவர், தற்போது தனதுஓய்வை அறிவித்துள்ளார், இனி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் மற்றும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
“ஐபிஎல் எனக்கு அளித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. ஆனால் தற்போது எனது பயணத்தை புதிய திசையில் தொடர்ந்து கொண்டு செல்ல விரும்புகிறேன்” என அஸ்வின் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு ரசிகர்கள் சார்பில் பாராட்டுகளும், வருத்தங்களும் இணையத்தில் பெருமளவில் வெளியாகி வருகின்றன.
