திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பாஜக பூத் கமிட்டி தென்மண்டல பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியபோது, திமுக அரசை வேரோடு பிடுங்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தார்.
இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாமல் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரைக்கு வருகிற 1-ஆம் தேதி புரட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். உங்கள் எனது எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார் என கூறியுள்ளார்.
