புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வில்லியம் பால்ராஜ் என்பவர் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இவர் அடிக்கடி மாணவியை சீண்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வில்லியம் பால் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.