விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார் பானாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவபாலன் (வயது 48). இவர், உடற்கல்வி வகுப்பின்போது 7-ம் வகுப்பில் படிக்கும் சிறுமிகள் சிலரை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை தவறாக தொடுவதாகவும், சில்மிஷம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் செயலால்  அதிர்ச்சியடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து கண்கலங்கி கதறியுள்ளனர்.

இதனைக் கேட்ட பெற்றோர், உடனடியாக விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது குழந்தைகள் பாலியல் குற்றத்துக்கு எதிரான POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் மீது துன்புறுத்தல் நடந்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சம்பவம் அந்த அந்த  பகுதியில் பரபரப்பையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.