நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய விரைவு சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளது.
அதில் விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என நெடுஞ்சாலை துறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
