அமெரிக்காவின் மியாமி நோக்கி சென்று கொண்டிருந்த கார்னிவல் குரூஸ் கப்பலில் பயணிகளிடையே பயங்கர சண்டை மூண்டது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை அதிகாலை, கப்பலின் கடைசி நாள் பயணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

கோழி இறைச்சி (சிக்கன் டெண்டர்ஸ்) காரணமாக இந்த மோதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. பயணி ஒருவரால் பதிவு செய்யப்பட்ட காணொளியில், ஏராளமான பயணிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், சிலர் தரையில் விழுவதும், மற்றவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மோதுவதும் பதிவாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mike Terra (@mikeisterra)

இந்த காணொளியை பதிவு செய்தவர் மைக் டெர்ரா என்ற பயணி, இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அவர் கூறும்போது, “கார்னிவல் கப்பல்கள் கேவலமானவை என்று எப்போதும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் பல ஆண்டுகளாக கப்பல் பயணம் செய்திருக்கிறேன், இப்படி ஒரு சம்பவத்தை முதல் முறையாக பார்க்கிறேன்,” என்று தெரிவித்தார்.

காணொளியில், அவர் கேமராவை தன்னை நோக்கி திருப்பி, “சிக்கன் டெண்டர்ஸ் மீது சண்டை போடுவது பைத்தியக்காரத்தனம்,” என்று கூறியது பரவலாக கவனம் பெற்றது. பயணிகள் மத்தியில் இந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் இதற்கு முழுமையான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.