தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர்.  தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் அவரே வரல. இவர் எப்படி வருவாரு? அப்படி இப்படின்னு நிறைய பேர் ஜோசியம் சொன்னாங்க.

கட்சியின் பெயர அறிவிச்ச பிறகு பேர்தான் அறிவிச்சிருக்காரு. மக்கள் கிட்ட பேர் வாங்கணும் அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாங்க. மாநாடு அறிவித்த பிறகு இவர் தனியா மாநாடு எப்படி நடத்த முடியும்? பக்கத்துல புஸ்ஸி ஆனந்த் வச்சுகிட்டு எப்படி மாநாடு நடத்த முடியும். அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும்.

ஆட்சியை புடிக்கிறது எல்லாம் அவ்வளவு ஈசி இல்லைன்னு பேசுறாங்க. இப்போ இவரு ஷூட்டிங்ல இருந்து நேரடியா ஆட்சிக்கு வருவாராம். அவரால் முடியல இவரால் எப்படி முடியும் அப்படின்னு சொல்லுறவங்க ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மாநாட்டுக்கு கூட்டம் வரதெல்லாம் சரிதான் அது எப்படி ஓட்டா மாறும்? அப்படின்னு பேசுறாங்க. அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்லுறது ஒன்னு தான். இந்த விஜய் பல லட்சம் பேர் கூடுற இந்த மாநாட்டில் மட்டும் இருக்காருன்னு நினைக்காதீங்க.

இங்க கூடியிருக்கிறவங்க ஓட்டு மட்டும் இல்ல, மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்க போற வேட்டா… நம்மள கோட்டைக்கு அனுப்ப போற ரூட்டா இருக்க போது. அதை சீக்கிரமே தெரிஞ்சுப்பீங்க. கோடிக்கணக்கான மக்களோட வீட்டிலேயும் மனதிலும் உணர்வா, அன்பா நாம கலந்து இருக்கோம். நாமளும் நம்ம மக்களும் எப்படி இருக்கிறோம் என்பது எல்லாருக்குமே தெரியும் என விஜய் பேசியுள்ளார்.