பாம்புகள் என்றாலே பலருக்கு பயத்தை உருவாக்கும். ஆனால் தற்போது, அவை அழகிய இயற்கை அலங்காரங்களைப் போல் காணப்படும் வகைகளால் ஆன்லைனில் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பாக, இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரும் சில பாம்புகள், நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.

இந்த பாம்புகள் வெறும் அழகு மட்டும் அல்ல, சிலவற்றின் விஷ சக்தி மரண ஆபத்தை தரக்கூடியதாக உள்ளது. அதாவது, பார்ப்பதற்கே அழகாக இருந்தாலும், இது வேட்டைபோடத் தயங்காத பாம்பு என்பதை மறக்கக் கூடாது.

1. ரோஸி போவா: இவை மிகவும் அமைதியான பாம்புகள். வெளிர் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் இது விஷமற்றது. இரையை சுற்றி இறுக்கி பிடிக்கும் தன்மை கொண்டவை.

2. பர்மிய மலைப்பாம்பு: இந்த பாம்பு விஷமற்றது என்றாலும், அதன் பலம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. சிலவகைகள் அல்பினோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும்.

3. பிங்க் மார்ப் போவா கன்ஸ்ட்ரிக்டர்: சிறை இனப்பெருக்கத்தில் உருவான இவை, அழகிய பிங்க் நிறத்தில் ஒளிரும் வகை. ரோஸி போவாவைப் போலவே வேட்டை நடத்தும்.

4. இளஞ்சிவப்பு ராட்டில்ஸ்நேக்: பாலைவனங்களில் வாழும் இது மிகவும் விஷமுள்ளதாகும். அதன் வாலில் இருந்து வரும் ஒலி, எச்சரிக்கையாக இருக்கிறது.

5. இளஞ்சிவப்பு நாகப்பாம்பு: மரபணு மாற்றத்தால் உருவான இப்பாம்பு, வலிமையான விஷம் கொண்டது. தோற்றத்தில் மட்டும் மாயை.

6. சா-ஸ்கேல்ட் வைபர்: உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்று. இளஞ்சிவப்பு நிற அடையாளங்கள் கொண்ட இது, தாக்கும் போது கடுமையான விஷப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அழகு, ஆபத்து, இயற்கையின் வியப்பு… இவை அனைத்தும் ஒன்றாகவே இந்த பாம்புகளில் பதியப்பட்டுள்ளது. இவை பற்றிய வீடியோக்கள் மற்றும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. உண்மையில், இந்த அரிய மற்றும் அபூர்வமான பாம்புகளை காணும் ஒவ்வொருவரும், “இது உண்மையா?” என்று ஆச்சரியப்படும் நிலையில் உள்ளனர்.