மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர் சூர்யன்ஷ் கோச்சார் (18 வயது) தனது முன்னாள் ஆசிரியை(26) மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர  சம்பவம் கடந்த திங்கள் மாலை 3:30 மணியளவில் ஆசிரியை வீட்டில் இருந்த போது நடந்துள்ளது. பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொண்டு சென்ற குற்றவாளி, திடீரென எதிர்பாராத நேரம்  ஆசிரியை மீது ஊற்றி தீவைத்து அவர் தப்பிச் சென்றுள்ளார்.

தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார், 25 % தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது இருப்பினும் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர், குற்றவாளி ஆசிரியை மீது ஒருதலைப்பட்சமான காதல் வளர்த்திருந்ததாகவும், அவர் அளித்த புகாருக்கு பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்தத் தாக்குதலைநடந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில்  புகாரின்படி, ஆசிரியை ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின நிகழ்வில் சேலை அணிந்திருந்ததை வைத்து, குற்றவாளி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக ஆசிரியை அளித்த புகாரே, குற்றவாளியை வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு, குற்றவாளி  கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். அவருக்கு எதிராக பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.