கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சிருப்பூரில்  ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மற்றொருவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார். காரை ஓட்டிச் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஐயப்பன் (19), ஆதினேஷ் (22), வேலு (19) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் பலத்த காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.