லண்டன் வீதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் இளம் முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணிந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தி நிற்கின்றனர். அருகில், பாகிஸ்தானிய ஆண்கள் குழு ஒன்று பாகிஸ்தான் கொடியை அசைத்தபடி காணப்படுகிறது.
இரு தரப்பினரும் கோஷங்களையும், முழக்கங்களையும் எழுப்புகின்றனர். ஒரு கட்டத்தில் இந்திய குழு சற்று விலகி செல்ல முயல்கிறது, ஆனால் பாகிஸ்தானிய குழுவினர் அவர்களை நெருங்கி, பாகிஸ்தான் கொடியை பெண்களின் முகத்திற்கு அருகே அசைக்கின்றனர்.
Pakistanis harass a couple of Indian Muslim girls in the streets of London during India’s independence day celebrations pic.twitter.com/PrhRKX3nAg
— Lord Immy Kant (@KantInEastt) August 18, 2025
பதற்றம் அதிகரிக்க, இரு குழுக்களுக்கிடையே மோதல் வெடிக்கிறது. இந்திய தரப்பைச் சேர்ந்த ஒரு ஆண், “நான் முஸல்மான்” என்று கூற, பாகிஸ்தானிய தரப்பினர் “மோடி ஒரு பயங்கரவாதி” என பதிலளிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய குழு, ஆபாச சைகைகளுடன் நடுவிரலை காட்டி இந்திய குழுவை அவமதிக்கிறது. நிலைமை மோசமடைய, தொடர்ச்சியான அவமரியாதையான செயல்கள் இந்திய குழுவை அப்பகுதியை விட்டு வெளியேற வற்புறுத்துகிறது.
