மலையாள சினிமாவின் நம்பகமான நடிகரான ஃபஹத் பாசில், ஒரு கட்டத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ இன்னாரிட்டு (Birdman, The Revenant) உடன் பணியாற்றும் பெரிய வாய்ப்பை இழந்தது குறித்து சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

“அவருக்கே நான் பிடிக்கலைன்னு நினைக்கிறேன், ஆடிஷனுக்குப் பிறகு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க,” என நகைச்சுவையாக தொடங்கிய ஃபஹத், பின்னர் உண்மையைத் தெளிவாக கூறினார்.

“என் ஆங்கில உச்சரிப்பை  அவர் பொருத்தமில்லைனு நினைத்தார். அதனால் 4 மாதங்கள் அங்கே தங்கி கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டேன். ஆனால்  அதற்கு சம்பளம் எதுவும் இல்லை. அந்த நேரத்தையும், உழைப்பையும் நான் முதலீடு செய்ய விரும்பவில்லை. அதனால்தான் அந்த வாய்ப்பை விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது, ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, அல்தாஃப் இயக்கியுள்ள திரைப்படம் “ஓடும் குதிரா சாடும் குதிரா”, ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது ஜோராகவும், தீவிரமாகவும் நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம், ஃபஹத்தின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.