கிரீஸின் கோர்புவிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நோக்கி புறப்பட்ட போயிங் 757-300 ரக விமானத்தில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து உருவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் புறப்பட்ட சில நேரங்களில், அதில் இருந்த வலது பக்க இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் வெளியில் எரிந்த காட்சிகள் பயணிகளிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. பயணிகள் கூச்சலிட, விமானி சூழ்நிலையை புரிந்து கொண்டு, விமானத்தை இத்தாலியின் பிரிண்டிசி நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். அதனைத் தொடர்ந்து, 273 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

“>

 

இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து, விமான அதிகாரிகளும், காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப அறிக்கைகள் ‘பறவைகள் மோதி தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்’ எனக் கூறுகின்றன. விமானத்தில் பயணித்தவர்கள், இது மரணத்தை நெருங்கும் அனுபவமாக இருந்தது என அதிர்ச்சியுடன்  தெரிவித்துள்ளனர்.

“>

 

 

தற்போதைய நிலைமைக்கேற்ப, விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.