பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலைகளில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட ஒரு இளைஞர் குழுவின் செயல் தற்பொழுது கடும் விமர்சனங்களுக்கு இடமளித்து வருகிறது. வீடியோவில்,  ஒரு இளைஞர், தனது பைக்கில் இருந்து இறங்கி ஒரு காரை நோக்கி நடக்கிறார். காரின் ஜன்னலுக்கு வெளியே சைபீரியன் ஹஸ்கி நாய் தலையை காட்டிக் கொண்டிருந்த தருணத்தில், அந்த இளைஞர் எந்த காரணமும் இல்லாமல் அந்த நாயை திடீரென அடிக்கிறார். அதிர்ச்சியில் திகைத்த நாய் மவுனமாக மாற, அவர் சிரித்துக்கொண்டே திரும்பிச் செல்கிறார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த காரில் இருந்த மற்றொரு நபர் கைநீட்டி , எதிர்க்கும் முயற்சி செய்தார். ஆனால் அந்த இளைஞர் குழுவினர் பதிலுக்கு பிளாஸ்டிக் பாட்டிலை வீசியும், தங்களை சிரிப்புடன் காட்டிக்கொண்டு தப்பி ஓடினர். இந்த வீடியோ ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதிக்கிடையிலான இரவில் எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதற்கான CCTV காட்சிகள் இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் எழுப்பியுள்ளது.

“>

 

பலர் இதற்காக கடும் கண்டனங்களை தெரிவித்து, “அந்த நாய்க்கு கூட அந்த நாட்டின் மக்கள் விட புத்திசாலித்தனம் அதிகம்”, “இவர்கள் மீது விலங்குகள் காப்பாற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற செயற்பாடுகள் ஒரு நாட்டின் மனித நேயத்தை பிரதிபலிக்காதது மட்டுமல்ல, விலங்குகளின் பாதுகாப்பும் இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை வலியுறுத்துகின்றன.