தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து கவர்னருமாக இருந்த இல. கணேசன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் தவறி விழுந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
இவருக்கு வயது 80 ஆகும் நிலையில் தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவராக இருந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் மணிபூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநராக பதவி வகித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
