இளைஞர்களிடையே டேட்டிங் கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், காதலன் ஏமாற்றியதால் காதலி கையும் களவுமாகப் வேறு ஒரு பெண்ணுடன் பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, ஒரு இளைஞன் தனது காதலியை புறக்கணித்து, வேறு ஒரு பெண்ணுடன் உணவகத்தில் டேட்டிங் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காதலி திடீரென அந்த இடத்தை அடைந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. காட்சியில், காதலி தனது காதலனை பார்த்தவுடனே அதிர்ச்சியடைந்து கோபத்தில் அறைந்தும் திட்டியும் சண்டை போட்டார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பெண் தடுக்க முயன்றாலும், காதலியின் ஆக்ரோஷத்தை கண்டு பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
Kalesh over Girlfriend caught his Boyfriend went on a Date with Other girl
pic.twitter.com/ENkT1qxa2e— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 14, 2025
“>
இந்த சண்டை காட்சி தற்போது X- தளத்தில் பகிரப்பட்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லைக்குகள், ரீஷேர்கள் குவிந்து வரும் நிலையில், பல நெட்டிசன்கள் “ஏமாற்றினால் இதுதான் முடிவு” என கருத்து தெரிவிக்கின்றனர். சிலர், “இன்றைய தலைமுறை சமூகத்தின் அடித்தளத்தையே குலைக்கிறது” என்று விமர்சிக்கின்றனர்.
மேலும், சிலர் அந்தக் காதலியின் குணத்தைப் பார்த்து “இவள் அவனுடைய காதலியா… இல்லையென்றால் அம்மாவா?” என்று கிண்டலடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள இந்த வீடியோ, இளைஞர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டி வருகிறது.
