ஜி எஸ் டி வரியில் சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரியால் இன்றளவும் பல வர்த்தக சிரமங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி ஜி எஸ் டி சீர்திருத்தத்தால் இந்த ஆண்டு தீபாவளிக்கு நடுத்தர வர்த்தகத்தினருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்று கூறினார். இதன் மூலம் பொருட்களின் விலை குறையும் என்று உறுதி அளித்துள்ளார். இதனால் நடுத்தர வர்த்தகத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.