ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம், எந்த ரஜினி படத்திற்கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படம் அதிகாலை முதலே திரையிடப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தியாவிற்கு முன்னதாகவே வெளியானதால், அங்கிருந்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

முதல் பாதியைப் பார்த்த ரசிகர்கள், ரஜினி எனர்ஜிடிக் எனவும், நாகார்ஜுனா ஸ்டைலிஷ் எனவும், அனிருத் இசை சூப்பர் எனவும் பாராட்டி வருகின்றனர். சிலர், காட்சிகள் சில இடங்களில் ஒட்டாத உணர்வு இருந்தாலும், முதல் பாதி ஓகே என்று குறிப்பிட்டுள்ளனர்.

இடைவேளை காட்சி – ரசிகர்களின் ஹைலைட்

கூலி படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரே சுருக்கமாக பேசுவது இடைவேளை காட்சி பற்றிதான். அந்த காட்சி “மாஸ்” என்று ரசிகர்கள் பரவசமாக தெரிவிக்கின்றனர். ஒருவரோ, அந்த இடைவேளை காட்சி லோகேஷின் ‘மாநகரம்’ படத்தை நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்ததை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதாகவும், அனுபவம் நன்றாக இருந்ததாகவும் பலரும் எழுதியுள்ளனர்.

“>

 

சிலர் கதை இன்னும் கொஞ்சம் பிடிமானமாக இருந்திருக்கலாம் எனச் சொன்னாலும், பெரும்பாலான விமர்சனங்கள் கூலி டீசன்ட் என்டர்டெய்னர் என்றே முடிவடைகின்றன.

“>