“புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பது பழமொழி, ஆனால் விலங்குகளின் விளையாட்டுத்தனமான செயல்கள் பல சமயங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு சிங்கம், பார்வையாளர்கள் எறிந்த சுரைக்காயை விளையாட்டாகக் கடித்து, பின்னர் முகத்தை சுருக்கி, “இதையெல்லாம் எப்படி சாப்பிடுவது?” என்பது போல ஒரு வேடிக்கையான பாவனையுடன் விலகிச் செல்கிறது. புலிகள் அவ்வப்போது பூக்களை கடித்து விளையாடுவதை வீடியோக்களில் பார்த்திருந்தாலும், சிங்கம் இப்படி ஒரு செயலை செய்வது அரிது என்பதால், இந்தக் காட்சி பார்ப்போரை சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பலரும் வேடிக்கையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “சிங்கம் முதல் முதலாக சைவ உணவை முயற்சித்துப் பார்த்துவிட்டது!” என்று சிலர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர், மற்றவர்கள் இந்த சிங்கத்தின் முகபாவனையை “அதிர்ச்சியில் உறைந்த சைவ உணவு அனுபவம்” என விவரித்து சிரிப்பை வரவழைத்துள்ளனர். .
