இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வெள்ளை நிற பூ ஒன்று இருந்தது. அது மிகவும் அழகாக இருக்க இந்த பெண் போட்டோ எடுக்க விரும்பினார். இதனால் பூவை தனது கையால் பிடித்துக் கொண்டு தனது முகத்தை அருகில் வைத்து புகைப்படம் எடுத்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Unserious (@unseriouspage)

அப்போது அதிலிருந்து தேனி ஒன்று அந்தப் பெண்ணின் மூக்கிற்குள் சென்றது. இதையடுத்து அந்தப் பெண்ணின் முகம் வீங்கத் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.