சென்னையிலிருந்து வந்த பக்தர்கள் குழு திருவண்ணாமலை மல்லிகார்ஜுனேஸ்வர் கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட பருவதமலையின்  வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இந்திரா(58) என்பவரின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும், மற்றொரு  பெண்ணின் மீட்பு நடவடிக்கைகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது 15 பேர் கொண்ட குழு பௌவுர்ணமி தரிசனத்துக்குப் பிறகு, பவதி் கோவில் தரிசனத்திற்கு  குழுவாக சென்றுள்ளனர். அப்போது ஆற்றை கடக்க ஒவொருவராக முயற்சித்த பொது குழுவில் உள்ள இந்திரா மற்றும் தமிழ்செல்வி என்பவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த  பக்தர்கள் உடனுக்குடன் அவசர உதவி கோரினர்.

இதுகுறித்து அறிந்த கடலாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தேடுதல்‑மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் இந்திராவின் உடல் கிடைத்தவுடன், அதை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும் மற்றொரு பெண்ணின் உடல் தேடும் மீட்பு பணிகள் தீவிரமாக தொடர்கிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரும் மற்றும் காவல் கண்காணிப்பரும் நேரடியாக சம்பவத் தளத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள்.