இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 🦇 (@nabile_dly)

அதாவது அந்த வீடியோவில் சாலையில் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த டிராக்டரின் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் நகரத் தொடங்கியது. இதில் பின் டயரின் முன்னால் நின்று கொண்டிருந்த வாலிபரின் மீது டிராக்டர் முழுவதும் ஏறி இறங்கியது.

இதையடுத்து அந்த வாலிபர் நடக்க முடியாமல் தள்ளாடி நடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.