காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே காசாவின் 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டார்.

இந்த முடிவுக்கு உள்நாட்டிலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களிடமுமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இஸ்ரேல் மக்களே, இது பணய கைதிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனது எக்ஸ் தள பதிவில் நெதன்யாகு, “நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கவில்லை, ஹமாஸிடமிருந்து விடுவிக்கிறோம். காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்போம், அமைதியான நிர்வாகத்தை உருவாக்குவோம்.

பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அங்கு இருக்காது. ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நமது மக்களை விடுவிப்பதற்கும், எதிர்கால அச்சுறுத்தல்களை நீக்குவதற்கும் இந்த நடவடிக்கை உதவும்” என்று தெரிவித்தார்.