உலகம் முழுவதும் வித்தியாசமான உணவுகளை சுவைக்க துணியும் பலர் உள்ளனர். ஆனால், உயிருடன் அசைந்துகொண்டிருக்கும் ஆக்டோபஸை சாப்பிடுவது பலருக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். சமீபத்தில், ஒரு கொரிய வாலிபர் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ‘சன்னக்ஜி’ எனப்படும் உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட்ட அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

வீடியோவில், வாலிபர் எள் எண்ணெயில் நனைத்துக் கொண்டு, இன்னும் அசைந்து கொண்டிருக்கும் ஆக்டோபஸை வாயில் இடுகிறார். “முதல் முறையாக உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிடுவது… பைத்தியக்காரத்தனமான அனுபவம்! ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்சிகள் @40kahani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதும், சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன.

பார்வையாளர்கள், உயிருடன் அசைந்துகொண்டிருக்கும் ஆக்டோபஸை சாப்பிடும் அந்த தருணத்தை ஆச்சரியத்துடன் பார்க்க, பலர் அதிர்ச்சியையும் சிலர் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பகிர்வுகளையும் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Yechan C. Lee (@40kahani)