இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் ரயில் விபத்தில், 21 வயது மிசா கனி மௌலானா ஃபிர்தௌஸ் என்ற இளைஞர், ஓடும் ரயிலில் மோதி உயிரிழந்தார். சம்பவத்தின் முழு காட்சியும் அவரது நண்பர் பதிவு செய்த வீடியோவாக தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தகவலின்படி, மிசா தனது நண்பர் நானாங் (19)ிடம், ஒரு கொடியை ஏந்தியபடி ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நடப்பதை பதிவு செய்யச் சொல்லியுள்ளார். சுரபயா குபெங்கிலிருந்து ஜகார்த்தா பசார் செனான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெயகார்த்தா ரயில் வேகமாக பின்புறத்தில் வருவதை கவனிக்காமல், மிசா தொடர்ந்து தண்டவாளத்தின் அருகே நடந்தார். நண்பர் தூரத்தில் இருந்து கேமராவில் படம்பிடித்து கொண்டிருந்தபோது, சில வினாடிகளில் ரயில் அவரை மோதி தூரத்துக்கு தூக்கி எறிந்தது.

திடீர் விபத்தால் திகைத்துப் போன நண்பர், குழப்பமடைந்து பதிவை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவை @globeseye வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “ஜகார்த்தாவில் 21 வயது மிசா கனி மௌலானா ஃபிர்தௌஸ், ஜெயகார்த்தா ரயிலில் மோதியதில் உயிரிழந்தார். அவர் ஸ்ராகன் மாவட்டத்தின் மசாரனில் உள்ள கிளிவோனனைச் சேர்ந்தவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஆபத்தான செயல்களை சாகசமாக நினைத்து செய்வதன் பேரிலேயே உயிரை இழக்க நேரிடும் என்ற எச்சரிக்கையாக பரவி வருகிறது.

 

https://www.instagram.com/p/DNKJviNtRtm/?utm_source=ig_embed&utm_campaign=invalid&ig_rid=dafdb04b-6024-44a1-9b38-ede64c01c9cb