தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், இன்று காலை 7 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.