அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், லான்காஸ்டர் கவுண்டியில் உள்ள பிராவிடன்ஸ் தொடக்கப்பள்ளியில் முதல்வர் ஜாக் பாயர்மாஸ்டர் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கமான முதல்வர் போல் இல்லாமல், மாணவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது என்றே கூறலாம். அவர் மாணவர்களுடன் ஹை-ஃபைவ், கைதட்டல் போன்ற உற்சாகமான முறைகளில் வரவேற்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை 376 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த காணொளி, பள்ளி நடைபாதைகளை மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் தொடர்பு கொள்ளும் இடமாக மாற்றியுள்ளதை வெளிப்படுத்துகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், “நடைபாதைகள் உறவுகளை உருவாக்கும் இடங்கள். மக்களை நாம் வரவேற்கும் விதம், அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும். பள்ளி என்பது குழந்தைகள் விரும்பி வரக்கூடிய இடமாக இருக்க வேண்டும். மேலும் மகிழ்ச்சியையும் மறக்கக்கூடாது” என்று பாயர்மாஸ்டர் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும், “சூப்பர் கூல் டீச்சர்”, “இப்படிப்பட்ட ஆசிரியர்கள்தான் நினைவில் நிற்பார்கள்” என்று பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
பீப்பிள் பத்திரிகையிடம் பேசிய பாயர்மாஸ்டர், “என் இலக்கு, குழந்தைகள் விரும்பும் பள்ளி, ஊழியர்கள் பெருமையுடன் பணிபுரியும் இடம், பெற்றோர்கள் நம்பிக்கையுடன் தங்கள் குழந்தைகளை அனுப்பும் சூழல் உருவாக்குவது” என்று தெரிவித்துள்ளார். கல்வியாளர் மட்டுமின்றி, அவர் ஒரு எழுத்தாளராகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
