போலந்தில் ரயில்வே கிராசிங்கில் நடந்த கொடூர விபத்தின் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு, ஒரு கிராமப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே, சிவப்பு சிக்னல் மற்றும் தடுப்புக் கம்பியை புறக்கணித்து, வேகமாக கடக்க முயன்ற வேன், கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டது. அந்த நேரத்தில் எதிர்புறத்திலிருந்து வந்த ரயிலை கண்டு, ஓட்டுநர் பதற்றமடைந்து, வேனை பக்கத்துக்கு இழுத்து வெளியேற்ற முயன்றார். ஆனால், சில வினாடிகளில் பலத்த வேகத்தில் வந்த ரயில் நேரடியாக மோத, வேன் பல துண்டுகளாக சிதறியது. ஓட்டுநர் உயிருடன் பிழைத்தாரா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோ, @TaraBull808 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு, 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. “நேரத்தை மிச்சப்படுத்த முயன்ற அவசர முடிவு, உயிரையே பறித்துவிட்டது” என நெட்டிசன்கள் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். “அவசரம் பிசாசின் வேலை” என்பதற்கு இது ஒரு நேரடி உதாரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Van driver runs the red light and gets hit by a train pic.twitter.com/n3223QyuzJ
— TaraBull (@TaraBull808) August 6, 2025
“>
வீடியோவிற்கு வந்த பல்வேறு எதிர்வினைகளில், “தடையை உடைத்து இருந்தால் உயிர் காப்பாற்றியிருப்பார்”, “ஓட்டுநர் ஏன் வாகனத்தை விட்டு விலகவில்லை?”, “பொறுமையின்மை தான் இப்படிப்பட்ட விபத்துகளுக்கு காரணம்” போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. நிபுணர்கள், ரயில்வே கிராசிங்கில் சிக்னல் மற்றும் கம்பி இறங்கும் போது எந்த நிலையிலும் கடக்க முயலக் கூடாது என்றும், வாகனம் சிக்கினால் உடனடியாக விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
