திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அ.தி.மு.க கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தோப்பில் வைத்து தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இவர்களுக்கு இடையே வழக்கு தீர்க்கப் போன எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்முகவேல் உடலுக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.‌ இந்த நிலையில் எஸ்.ஐ-யை கொலை செய்த மூர்த்தி மற்றும் அவரது மகன் இருவரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மூர்த்தியின் மகன் தங்கப்பாண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்பு அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது ” எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சுட்டாங்க. கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடுவதற்கு நாங்க தான் கிடைச்சோமா?…” என சத்தம் போட்டு கூறியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பே தங்கபாண்டியின் சகோதரன் மணிகண்டன் எஸ்.ஐ.-யை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டார். அவர்  இன்று காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.