இணையத்தில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. வீடியோவில், ஒரு இளைஞர் சாலையின் நடுவே தனது பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார்.
பைக்கில் ஓட்டிக்கொண்டே நின்று, அதிலிருந்து குதிக்க வாலிபர் குதித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த ஒரு சிறுவன் மேல் மோதியது. இதில் சிறுவனுடன் பைக் வயலுக்குள் கீழே விழுந்தது.
Humla Aachanak hua pic.twitter.com/LNzkdeoNhK
— Bhoomika Maheshwari (@sankii_memer) August 4, 2025
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், சாலையோரத்தில் நின்றிருந்த சில குழந்தைகள் அந்த ஸ்டண்டை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஸ்டண்ட் விபத்தாக முடிவடைய, அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ X தளத்தில் @sankii_memer என்ற கணக்கில் பகிரப்பட்டதையடுத்து, தற்போது வைரலாக பரவி வருகிறது.
பயனர்கள் இந்த வீடியோவில் “முட்டாள் செயல்”, “பொறுப்பில்லாத ஸ்டண்ட்” என கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். “ஸ்டண்ட் செய்ய நேரமும் இடமும் தெரிந்திருக்க வேண்டும்” என ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.
