வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவில் இணைந்தனர்.

அதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான சங்கரன்கோவில் நகர செயலாளர் சோடா சங்கர், சரவணன், வடகரை சேர்ந்த திமுக நிர்வாகி ஐயப்பன், சமூக ஆர்வலர் அருள் உள்ளிட்ட பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்..