இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DJTbj2LIjRI/?igsh=eWl3dXoxM3A5ZDh4
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் கூண்டில் இருக்கும் சிங்கத்திற்கு உணவளிக்கிறார். ஒரு முழு கோழியை அவர் வெளியிருந்து தூக்கி வீசுகிறார். இதனை சிங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பின் அந்த வாலிபர் சொடக்கு போடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் சீறிப்பாய்ந்து ஓடி வந்து அவரை கடிக்க முயற்சி செய்கிறது.
அதற்குள் அந்த வாலிபர் கூண்டின் கதவை மூடிவிட்டார். இருப்பினும் சிங்கம் கர்ஜித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
