திராவிட மாநகராட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று இரவில் இருந்து இதுதான் talk of the town, talk of the nation என்றே சொல்லலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க நிலையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம். நம்முடைய சாதனையை நாம் தான் முறியடிக்க முடியும் என்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல் இது என நிதியமைச்சர் கூறியுள்ளார்.