உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தில், புறநகர் பகுதியில் உள்ள டெப்யூட்டி கஞ்ச் பகுதியில் புர்கா அணிந்த பெண்ணை நடுத்தெருவில் தொட்டு ஆபாசமான முறையில் தொந்தரவு செய்த ஆதில் சைஃபி என்பவரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, மொரடாபாத் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரை பிடிக்க விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணித்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆதிலின் இருப்பிடத்தைப் கண்டுபிடித்து ஜிகர் காலனியில் உள்ள ராம்கங்கா ஆற்றுப் பக்கத்தில் உள்ள நத் பாபா மடம் அருகே தேடினர்.
उत्तर प्रदेश मुरादाबाद में मुस्लिम महिला के साथ छेड़खानी @myogiadityanath क्या यही है बेटी बचाओ बेटी पढ़ाओ?
यहाँ पर सवाल उठता है उत्तर प्रदेश में नारी सुरक्षा लेकिन @moradabadpolice से उम्मीद है की यई भी हो इसका लंगड़ाकर चलते हुए @Uppolice वीडियो ज़रूर जारी करेगी!@dgpup pic.twitter.com/CVYMeiGIkY— ♛꧁نوͥابͣ ͫشیخ ⚔️⚔️ (Nawab) (@shaikhnawab07) August 5, 2025
மோட்டார் சைக்கிளில் வந்த ஆதில் தப்ப முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்தது. உடனே ஆதில் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் சுட்டதில், அவரது காலில் காயம் ஏற்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
वरिष्ठ पुलिस अधीक्षक @moradabadpolice के निर्देशन में थाना नागफनी पुलिस ने महिला के साथ छेडछाड/अश्लीलता करने के शातिर आरोपी को पुलिस मुठभेड़ में किया गिरफ्तार,कब्जे से एक मो0सा0(बिना नम्बर प्लेट), अवैध शस्त्र व कारतूस बरामद।#UPPolice pic.twitter.com/frsRhgINrW
— MORADABAD POLICE (@moradabadpolice) August 4, 2025
அதன்பின்னர் ஆதிலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் போலீசாரிடம் “தயவுசெய்து மன்னித்துவிடுங்கள், இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன்” எனக் கூறி மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. போலீசார் அவரது வாகனம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மொரடாபாத் மாநகர காவல் கண்காணிப்பாளர் ரண்விஜய் சிங், “FIR பதிவு செய்யப்பட்ட 14 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டார். போலீசாரின் செயல்திறனை பாராட்டுகிறோம்” எனக் கூறியுள்ளார். தற்போது ஆதிலுக்கு எதிராக சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
