பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேயின் மருமகனும், நடிகை அனன்யா பாண்டேயின் உறவினருமான அஹான் பாண்டே, தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறார். இவரது அறிமுக திரைப்படமான ‘சாயாரா’ கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் இந்தியாவில் ரூ.299.75 கோடி, உலகளவில் ரூ.460.15 கோடி வரை வசூலித்து அஹானுக்கு திரையுலகத்தில் ஒரு பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்நிலையில், ஒரு பழைய விடுமுறை பயணத்தின் போது அஹான் பாண்டே தேள் சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
ஒரு உள்ளூர் சந்தையில் அவர் தேள் சாப்பிடும் வீடியோவில், அருகிலிருந்தவர்கள் அதை பதிய, அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “ஐயோ! இதுதானா நாம் பார்த்த சாயாரா ஹீரோ?”, “என்னடா இது!?” என ஆச்சரியத்துடன் விமர்சனம் பதிவு செய்து வருகின்றனர்.
அஹான் பாண்டே டிசம்பர் 23, 1997-ல் மும்பையில் பிறந்தவர். அவருடைய தந்தை சிக்கி பாண்டே ஒரு தொழிலதிபர்; தாயார் டீனா பாண்டே உடற்பயிற்சி நிபுணரும், எழுத்தாளருமாவார். அவரது சகோதரி அலனா பாண்டே ஒரு யூடியூபர்.
தனது படிப்பை முடித்த பிறகு, அஹான் உதவி இயக்குநராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். ஃப்ரீக்கி அலி, ராக் ஆன் 2, மர்தானி 2, ரயில்வே மேன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது தேள் சாப்பிட்ட வீடியோவால் அஹான் மீதான கவனம் புதிய கோணத்தில் திரும்பியுள்ளது.
