மும்பை சாண்டாக்ரூஸ் மேற்கு பகுதியில் உள்ள எஸ்.என்.டி.டி. கல்லூரி அருகே கடந்த சனிக்கிழமை சாலை கடக்க முயன்ற 39 வயதுடைய கணேஷ் லகான் ஷா என்பவர், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

சம்பவம் நிகழ்ந்ததும் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தொடர்புடைய பைக் ஓட்டுநர் ஜூஹூ கொலிவாடாவைச் சேர்ந்த 21 வயதுடைய கினன் மிஸ்கிதா என அடையாளம் காணப்பட்டார். போலீசார் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அவரது வீடு வரை பின்தொடர்ந்து கைது செய்தனர்.