நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய போது, திமுக அதிமுகவை பேய் பிசாசு என குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது, பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டிக் கொள்கின்றனர்.
அதிமுகவை வைத்து திமுகவை எப்படி ஒழிக்க முடியும்? தீமையை வைத்து மற்றொரு தீமையை எப்படி அழிக்க முடியும்? மக்கள் விழித்துக் கொண்டால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். கூட்டணியால் அல்ல. அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார்.
அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக திமுக பயணம் செய்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் அதிமுகவும் திமுகவும் பயணம் செய்கிறது? அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கைகளை வைத்திருக்கிறார்?
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. திரை வெளிச்சத்தில் அவ்வபோது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.
