‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருக்கென தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாலும் ஏராளம். இவர் அம்பிகாபதி (ராஞ்சனா) என்ற படத்தின் மூலம் நடிகர் தனுஷ் ஹிந்தியில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு திரையில் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

இந்த படம் திரையில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆனாலும் சில நாட்களுக்கு முன்பு படத்தின் கிளைமேக்ஸை ஏ ஐ மூலம் மாற்றியமைத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

முதலில் படத்தில் தனுஷ் உயிரிழப்பது போன்ற காட்சிகள் படமாக்க பட்டிருந்தது. தற்போது ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட்டு தனுஷ் உயிர் பெறுவது வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது, தன்னுடைய கருத்தை கேட்காமலே அம்பிகாபதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி அமைத்து பட தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளதாகவும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு நடிகர் தனுஷும் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் என்னை முழுவதுமாக தொந்தரவு செய்துள்ளது. என்னுடைய கருத்தை மீறி இந்த படத்தை மாற்றியமைத்துள்ளனர்.

12 வருடங்களுக்கு முன்பு நான் ஓகே சொன்ன படம் இது இல்லை. ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள் சினிமாவை முழுவதுமாக அச்சுறுத்துகிறது. வருங்காலத்தில் இது போன்ற விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை” என்று தெரிவித்துள்ளார்.