தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டவர்கள் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா. கணவன் மனைவியான இருவரும் அகரம் என்று தொண்டு நிறுவனத்தை கடந்த 15 வருடங்களாக நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மூலம் படிக்க வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் சிலர் பயன்பெற்றுள்ளனர்.
நேற்று அகரம் அறக்கட்டளையின் 15 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நிறுவனத்தில் படித்த அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். அகரம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு சூர்யா ஜோதிகா குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பல்வேறு திரை பிரபலங்களும் உதவிகள் செய்து வந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் மாநிலங்களவையின் எம்பி கமல்ஹாசன் பங்கேற்று உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது வாழ்த்துரைகளை தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் த.ஞானவேல் அவர்கள் ரூபாய் 50 லட்சம் காசோலையை நன்கொடையாக அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.
