ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க ஆப்பரேஷன் அகால் என்று பாதுகாப்பு படையினரால் தொடங்கப்பட்டது. இது மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள குல்கா மாவட்டத்தின் ஆகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கி சூட்டில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
