பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. அதன் பின்பு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மையமாகும் பணி நிறைவடைந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தேர்தலில் பாஜகவை வெற்றி பெற தேர்தல் ஆணையத்தின் சதி என்று எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் ஆர் ஜே டி கட்சியை சேர்ந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, வலைதளத்தில் EPIC நம்பர் உள்ளீடு செய்து பார்த்தபோது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் காட்டவில்லை என்று தெரிவித்தார். இதற்கு உடனே பதில் அளித்த தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றைக் கூறி இருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 ல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்த ஒரு கூற்றும் உண்மை கிடையாது என்று தெரிவித்துள்ளது.
