காங்கிரஸ் மாநாட்டில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது கடந்த 2014 ஆம் ஆண்டும் மக்களவைத் தேர்தல் முதல் தற்போது வரை ஏதோ தவறு நடந்திருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. தேர்தல் முறைகேடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே புதிய வாக்காளர்கள் தோன்றுகின்றனர். புதிதாக தோன்றும் வாக்காளர்களின் வாக்கு பாஜகவுக்கு செல்கிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது ஆச்சரியம் தருகிறது. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல் காந்தி என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலில் 15 இடங்கள் மோசடி செய்யாமல் இருந்திருந்தால் அவர் மீண்டும் பிரதமராக இருக்க முடியாது. இந்த ஆதாரத்தை கண்டுபிடிக்க ஆறு மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். வாக்களித்த 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.