உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓட்டலின் வெளியே பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. ஒரு திருமணமான ஆண், தனது காதலியுடன் ஓட்டலுக்குச் சென்றுள்ளார்.

இவரது நடத்தை குறித்த சந்தேகத்தில் இருந்த மனைவி, சந்தையில் இருக்கும் போது கணவரை அந்த பெண்ணுடன் கண்டு பிடித்து, அவர்களை பின்தொடர்ந்து ஓட்டலில் நேரில் பிடித்துள்ளார். அதன்பின், கோபம் அடைந்த மனைவி, காதலியை நடு ரோட்டில் இழுத்து வந்து சரமாரியாக அறைந்தும், காலால் மிதித்தும் தாக்கியுள்ளார்.

இந்த தகராறை அருகில் இருந்த ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். குறித்த வீடியோவில், பெண்களிடையே ஏற்பட்ட சண்டையை பொதுமக்கள் கண்டு கொண்டிருப்பதும், கணவர் வாக்குவாதத்தை தவிர்த்து அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஹாபூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பட்டநீஷ் குமார் கூறியதாவது, “சாலையில் இருவர் சண்டை போட்டதை போலீசார் பார்த்து அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.  பொது அமைதியை பாதித்ததாக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.