நாடு முழுவதும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர்களுக்கு வருடம் தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்தில் சிறந்த Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிற்காக லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படமாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் திரைப்படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் சிறந்த படமாக பாலையா நடித்த பகவந்த் கேசரி திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த ஒடியா திரைப்படமாக புஷ்கரா திரைப்படமும், சிறந்த மராத்தி திரைப்படம் ஆக சாய்ஸி ஆய் திரைப்படமும் தேர்வாகியுள்ளது.
மேலும் சிறந்த கன்னட திரைப்படமாக கண்டீலு தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்தி திரைப்படமாக கட்ஹல் தேர்வாகியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
