முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனை எதிர்த்து அவரது கட்சி ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் பைசலாபாத்தில் உள்ள ஜின்னா ஹவுஸ், மியான்வாலி விமானப்படைத்தளம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டிடம் உள்ளிட்ட ராணுவ பகுதிகளை சேதப்படுத்தினர்.
மேலும் இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராவல் பிண்டில் உள்ள ராணுவ தலைமையாகவும் அந்த கும்பலால் தாக்கப்பட்டது.
அந்த தாக்குதலில் ஈடுபட்ட 185 பேரில் 77 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 108 குற்றவாளிகளுக்கு நேற்று பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
