அமெரிக்காவின் சால்ட் லேக் நகரிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், கடும் டர்புலன்ஸ் (காற்றழுத்த அலை) காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் 13 விமான குழுவினர் பயணம் செய்தனர். சம்பவம், புதன்கிழமை மாலை நேரத்தில் நிகழ்ந்தது. விமானம் நடுவானில் பயணித்து கொண்டிருந்தபோது காற்று அலைகளால் தடுமாறியது, இதையடுத்து விமானத்தை மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விட கட்டுப்பாடு எடுக்கப்பட்டது.

Flightradar24 என்ற விமான கண்காணிப்பு தளத்தின் தகவலின்படி, இந்த விமானம் 90 வினாடிகளில், 38,000 அடி உயரத்திலிருந்து 35,775 அடிக்கு திடீரென குறைந்துள்ளது. மொத்தம் 9 மணி நேரம் பயணிக்க இருந்த விமானம், புறப்பட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. அதனையடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு உடனடி பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 25 பேர் சிலருக்கு காயம் ஏற்பட்டது அல்லது சலிப்பான நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விமானம் ஏன் டர்புலன்ஸில் சிக்கியது, இதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.