அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விமானி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, F-35 போர் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம், அமெரிக்க நேரப்படி  காலை 6:30 மணியளவில், பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் நடந்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பயிற்சியின் ஒரு பகுதியாக பறந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தில் இருந்த விமானி (பைலட்), விபத்து நேரத்திற்கு முன் பாராசூட்டின் உதவியுடன் விமானத்திலிருந்து குதித்து பாதுகாப்பாக தரையிறங்கினார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பைலட்டின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“>

 

இந்த விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. சம்பவ இடத்தில் விமானம் விழுந்ததும், தீப்பற்றி எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் பற்றி  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும், இது ஒரு பயிற்சியின் போது நடந்தது என்பதால், மேலும் எந்த உயிரிழப்பும் அல்லது சொத்துத் தீமையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.