இன்று(ஆக.01) காலையும் நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடனே, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினை மூன்றாவது முறையாக சந்தித்துள்ளர். நேற்று காலை வாக்கிங் சென்ற போது முதல்வர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசிய ஓ.பி.எஸ், அதனைத் தொடர்ந்து மாலையில் நேரிலாக முதலமைச்சர் இல்லத்திற்கே சென்று இரண்டாவது முறையாக சந்தித்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலையிலும் வாக்கிங் நேரத்தில் இருவரும் மீண்டும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சந்திப்புகளில் அரசியல் சம்பந்தமான எதுவும் பேசப்படவில்லை என ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர் சந்திப்புகள், தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைப்புகளுக்கு அஸ்திவாரமா என்பதைப் பற்றிய ஊகங்களை எழுப்பி உள்ளன.
